சென்னையில் நாளை தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூட்டம் - பவன் கல்யாண் கட்சி பங்கேற்பு

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நடைபெற உள்ள கூட்டத்தில் பாஜக கூட்டணியில் உள்ள பவன் கல்யாணின் கட்சி பங்கேற்கிறது.;

Update:2025-03-21 20:41 IST

நாடுளுமன்ற பகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நாளை சென்னையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியை சேர்ந்த எம்.பி. பங்கேற்பார் என தகவல் தெரிவிக்கப்படிருக்கிறது.

குறிப்பாக நாளை நடைபெறும் கூட்டத்தில் கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முதல்-மந்திரிகள் உள்பட 24 அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த சூழலில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுவது பாஜக கூட்டனியில் இருக்கக்கூடிய ஜனசேனா கட்சி பவன் கல்யாணின் கட்சியாகும்.

இந்த கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய் சீனிவாஸ் நாளை சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதற்காக 7.30 மணிக்கு சென்னைக்கு வரவுள்ளார். ஆந்திராவின் துணை முதல்-மந்திரியாக இருக்கக்கூடிய பவன் கல்யாண் பாஜக கூட்டணியில் இருக்கிறார். அவருடைய கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் இந்த கூட்டத்தில் பங்கேற்க போகிறார் என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்