சென்னை விமான நிலையத்திற்கான மெட்ரோ சேவை நிறுத்தம்
சென்னை விமான நிலையத்துக்கான மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையத்துக்கான மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விமான நிலையத்திற்கான ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், விம்கோ நகர் டிப்போவிற்கும் மீனம்பாக்கத்திற்கும் இடையிலான சேவைகள் வழக்கம் போல் இயங்குகின்றன. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.