தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

கோவில்பட்டியை அடுத்த கயத்தாறு பகுதியில் ஒரு வாலிபர், 15 வயது சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.;

Update:2025-08-05 09:18 IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த கயத்தாறு இந்திராநகரைச் சேர்ந்த பாரதி மகன் சின்னத்துரை (வயது 26), வண்ணம் பூசும் தொழில் செய்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான புகாரின்பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னத்துரையை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்