தங்க சங்கிலியை நேர்மையோடு காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

எளியவர்கள் எப்போதும் நேர்மையின் பக்கம்தான் என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாக மின்னிடும் தங்கை கிளாராவுக்கு எனது அன்பும் பாராட்டுகளும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Update:2025-09-04 16:59 IST

தூய்மைப் பணியாளர் கிளாராவின் நேர்மையை பாராட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

"தூய்மைப் பணியின்போது கண்டெடுத்த தங்கச் சங்கிலியை நேர்மையோடு காவல்துறையிடம் சகோதரி கிளாரா அவர்கள் ஒப்படைத்த செய்தியைப் பார்த்து நெகிழ்ந்தேன்.

எளியவர்கள் எப்போதும் நேர்மையின் பக்கம்தான் என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாக மின்னிடும் தங்கை கிளாராவுக்கு எனது அன்பும் பாராட்டுகளும்!"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்