வேலூரில் கொலை வழக்கு கைதி தப்பியோடிய விவகாரம் - 4 காவலர்கள் பணியிடை நீக்கம்

கைதி தப்பியோடியபோது பாதுகாப்பு பணியில் இருந்த 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2025-02-18 09:33 IST

வேலூர் மாவட்டம் காட்பாடியில் கடந்த 2021 ஆம் ஆண்டு யாசகம் எடுப்பவரை கொலை செய்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த பாபு ஷேக் (55) என்பவர் தண்டனை கைதியாக வேலூர் மத்திய சிறையில் இருந்து வந்தார்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 15ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாபு ஷேக் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றார்.

இந்த நிலையில், கைதி தப்பியோடியபோது பாதுகாப்பு பணியில் இருந்த 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆயுதப்படை காவலர்களான கொற்கை பாண்டியன், கோகுல், சத்தியமூர்த்தி மற்றும் கண்ணன் ஆகிய காவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்