தூத்துக்குடியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 8 பேர் கைது

திருப்பூரில் முருகன் கோவில் உள்ளிட்ட 3 கோவில்கள் இடிக்கப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;

Update:2026-01-08 09:18 IST

திருப்பூரில் முருகன் கோவில் உள்ளிட்ட 3 கோவில்கள் இடிக்கப்பட்டதை கண்டித்தும், அங்கு அதை பார்வையிட சென்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி சார்பில் டூவிபுரம் 5வது தெரு காரியாலயம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் தலைமை வகித்தார். இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் திருப்பதி வெங்கடேஷ், செயற்குழு உறுப்பினர் பலவேசம், மேற்கு மண்டல தலைவர் சுதாகர், தூத்துக்குடி ஒன்றிய தலைவர் முத்துகிருஷ்ணன், வடக்கு மண்டல செயலாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து அனுதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக மத்தியபாகம் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்