தூத்துக்குடியில் தேசிய கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது

தூத்துக்குடியில் தொடங்கிய தேசிய கடல் சாகச விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 200 பேர் பங்கேற்று விளையாடுகின்றனர்.;

Update:2025-09-13 14:43 IST

தமிழ்நாடு சுற்றுலாத் துறை, அக்குவா அவுட் பேக் அமைப்பு ஆகியன சார்பில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டிகள் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நேற்று தொடங்கியது. படகில் நின்ற நிலையில் துடுப்பு செலுத்துதல், அமர்ந்த நிலையில் துடுப்பு செலுத்துதல், கைட் சர்ஃபிங், பீச் வாலிபால், மாரத்தான், ஒய்ல்டு வாரியர் போன்ற போட்டிகளும் நடைபெறுகின்றன.

இதில் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 200 பேர் பங்கேற்று விளையாடுகின்றனர். தொடக்க விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் சீதாராமன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இந்தப் போட்டிகள் நாளை (செப்டம்பர் 14) ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகின்றன. இதில் வெற்றி பெறும் வீரர்-வீராங்கனைகள் சர்வதேச அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவர்.

Tags:    

மேலும் செய்திகள்