நெல்லை: தாமிரபரணி ஆற்றில் சிக்கிய பக்தர்கள் பத்திரமாக மீட்பு
ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் ஆற்றை கடக்க முடியாமல் சிக்கி தவித்தனர்.;
நெல்லை,
பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பழைய பட்டவராயன் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவில் கலந்துகொள்வதற்காக பக்தர்கள் தாமிரபரணி ஆற்றை கடந்து சென்றனர். கோயில் திருவிழா முடிந்து பக்தர்கள் வெளியேற தொடங்கிய போது, தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் ஆற்றை கடக்க முடியாமல் சிக்கி தவித்தனர். உடனடியாக வனத்துறையினர் கட்டிய கயிற்றை, பக்தர்கள் பிடித்து கொண்டும், குழந்தைகளை பாத்திரங்களில் வைத்தும் பாதுகாப்பாக வெளியேறினர்.