திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக முப்பெரும் விழா கரூர் நடைபெற்றது.;

Update:2025-09-17 18:27 IST

திமுக சார்பில் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15-ந் தேதி, பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 17-ந் தேதி மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 17-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தாண்டு திமுக முப்பெரும் விழா கரூர் கோடங்கிபட்டியில் இன்று நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் நின்று உண்மையாக உழைக்கிறோம். தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமையும். நாட்டிலேயே முதலில் ஆட்சியை பிடித்த மாநில கட்சி திமுக. மிரட்டலுக்கு பயப்படும் கட்சி திமுக அல்ல. ஈராயிரம் ஆண்டுகளாக காவி கூட்டத்துடம் போராடி வருகிறோம். திமுகவுக்கு மாற்று, மாற்றம் என்றவர்கள் எல்லாம் மறைந்து போனார்கள். திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்