பாஜகவை ஆதரிப்பதால் மட்டும் எஸ்.ஐ.ஆர்-ஐ ஆதரிக்கவில்லை - ஜெயக்குமார்

வாக்காளர் பட்டியல் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைபாடு என ஜெயக்குமார் கூறினார்.;

Update:2025-11-20 17:07 IST

சென்னை,

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

”தமிழக வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயரை நீக்குங்கள் என 20 வருடங்களாக தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகிறோம், எஸ்.ஐ.ஆர் மூலம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம், வாக்காளர் பட்டியல் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைபாடு. சென்னையில் சில தொகுதிகளை ஆய்வு செய்ததில் 1,500 வாக்குகள் இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள், விலாசம் இல்லாதவர்கள் உள்ளதை கண்டறிந்துள்ளோம்.

Advertising
Advertising

வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதால் தான் எஸ்.ஐ.ஆர்-ஐ அதிமுக ஆதரிக்கிறது. தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு. அதிமுக ஆட்சியில் இருந்த காலத்திலும் ஒவ்வொரு முறையும் வாக்காளர் திருத்த பணியை முறையாக செய்யுங்கள் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய அரசு தான் செய்ய வேண்டும். பாஜக ஆதரிப்பதால் மட்டும் எஸ்.ஐ.ஆர்-ஐ ஆதரிக்கவில்லை. வெளிப்படைத்தன்மையுடன் வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஆதரிக்கிறோம். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ளார்கள். அதில் வாக்காளர் பெயர் இல்லை என்றால் முறையிட வாய்ப்பு உள்ளது. பிறகு ஏன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும்?”

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்