எஸ்.ஐ.ஆர்.-ஐ தடுப்பதே நமது ஆகப்பெரும் கடமை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர்ந்து செயலாற்றுவோம்.. நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை!
ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் SIR எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம் - களப் போராட்டம் -
மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட #SIR பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திட #WarRoom #Helpline -
களப் போராட்டத்தில், இன்று தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தியும் - கண்டன முழக்கங்களை எழுப்பியும் SIR எனும் பேராபத்துக்கு எதிராகக் கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்!
தொடர்ந்து செயலாற்றுவோம்! நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.