தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்; சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுப்பு
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.;
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். தீபாவளிக்கு மறுநாளான இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தீபாவளி விடுமுறை நிறைவடைந்த நிலையில் மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர். இதனால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. உளுந்தூபேட்டை, செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலையில் நெரிசலை குறைக்க கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.