சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.;

Update:2025-02-14 13:45 IST

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

சென்னையில் நாளை (15.02.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அம்பத்தூர்: சின்ன காலனி, பெரிய காலனி, பி.கே.எம் சாலை, பிரின்ஸ் அபார்ட்மென்ட் , கணேஷ் தெரு, நாகேஸ்வரா 3வது குறுக்குத் தெரு.

கிழக்கு முகப்பேர்: சீனிவாச நகர், பாக்கியத்தம்மாள் நகர், பெரியார் பிரதான சாலை, ஒலிம்பிக் காலனி, அக்ஷயா காலனி , காமராஜர் தெரு. மோகன்ராம் நகர், பாரதிதாசன் நகர், கொங்கு நகர், வி.ஜி.பி நகர் ,பன்னீர் நகர்.

ரெட்ஹில்ஸ்: எம்ஜிஆர் நகர், முத்துமாரியம்மன் தெரு, ஆசை தம்பி தெரு, மூவேந்தர் தெரு, சர்ஜ் தெரு, காமராஜர் நகர், நேதாஜி நகர், ஆலமரம் பகுதி, காந்தி நகர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்