காவலர் தினம்: வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கேடயம்- ஏ.எஸ்.பி. வழங்கினார்

தூத்துக்குடியில் காவலர் தினத்தை முன்னிட்டு காவல் துறையினருக்கு இடையே நடைபெற்ற விழிப்புணர்வு வாலிபால் போட்டியை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்.;

Update:2025-09-06 22:03 IST

1859ம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 6-ம் நாள் காவலர் நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி இன்று தமிழகத்தில் காவலர் தினம் கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு இன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் உள்ள காவல்துறை பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப் கைப்பந்தாட்ட அரங்கத்தில் காவல்துறை அணியினருக்கு இடையே நடைபெற்ற வாலிபால் போட்டியை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் முதல் பந்தை அடித்து துவக்கி வைத்தார்.

இதில் தூத்துக்குடி நகர உட்கோட்டம், ஆயுதப்படை மற்றும் கோவில்பட்டி உட்கோட்டத்தைச் சேர்ந்த காவல் அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். பின்னர் அந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்த ஆயுதப்படை காவல்துறையினருக்கு தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் கேடயம் வழங்கி பாராட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்