செங்கல்பட்டு - அரக்கோணம் ரெயில் பாதையை இரட்டை வழிப் பாதையாக மாற்ற திட்டம்

பயணியர் ரெயில் மட்டுமின்றி, சரக்கு ரெயில்களும் கூடுதலாக இயக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.;

Update:2025-10-24 17:18 IST

சென்னை,

செங்கல்பட்டு - அரக்கோணம் ஒரு வழி ரெயில் பாதையை, 1,538 கோடி ரூபாயில் இரட்டை வழிப் பாதையாக மாற்ற, தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் முடிந்த நிலையில், பணிகளை துவக்க நிதி கேட்டு, ரெயில்வே வாரியத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இரட்டை ரெயில்வே பாதை பயன்பாட்டிற்கு வந்தால், தினமும் 13 ரெயில்வே இயக்கும் இடத்தில், 40 ரெயில்வே வரை விரிவுபடுத்த முடியும்.

பயணியர் ரெயில் மட்டுமின்றி, சரக்கு ரெயில்களும் கூடுதலாக இயக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ரெயில்வே நிர்வாகம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதால், பயனுள்ள திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என, பல்வேறு மாவட்ட மக்களும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

பயணிகள் தாமதம் குறையும்: 

இந்தத் தடத்தில் ஒற்றைப் பாதை இருப்பதால், பாலூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம் போன்ற ரெயில் நிலையங்களில் எதிரே வரும் ரெயிலுக்காகப் பல மணி நேரம் ரெயில்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இரட்டைப் பாதை அமைந்தால் இந்தத் தாமதம் குறையும்.

புறநகர் ரெயில் சேவை: அரக்கோணம் முதல் செங்கல்பட்டு வரை சென்னை கடற்கரை வழியாகச் செல்லாமல், தக்கோலம் வழியாகச் செல்லும் ஒரு பிரத்யேக புறநகர் ரெயில் சேவையை இயக்குவதற்கு இந்த இரட்டை வழித்தடம் ஒரு வாய்ப்பை உருவாக்கும்.

சரக்கு ரயில் போக்குவரத்து:

சரக்கு ரெயில் போக்குவரத்து: அதிக எண்ணிக்கையிலான சரக்கு ரயில்களையும் தாமதமின்றி இயக்க முடியும்.பிராந்திய மேம்பாடு: இந்தத் திட்டம் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரெயில் போக்குவரத்தை மிகவும் மேம்படுத்தும்.திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, ரெயில்வே வாரியத்தின் ஒப்புதலைப் பெற்று கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்குவதற்கான முயற்சிகளை தெற்கு ரயில்வே மேற்கொண்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்