ஏரியில் மூழ்கி பலியான பள்ளி மாணவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

ஏரியில் மூழ்கி பலியான பள்ளி மாணவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.;

Update:2025-06-15 13:58 IST

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர், பார்வதிபுரம் கிராமம், சவேரியார் நகரைச் சேர்ந்த வின்சென்ட் அமல்ராஜ் அந்தோணி என்பவரின் மகன் அப்டேல் டெவின் ரோஜர் (வயது 17) என்பவர் நேற்று (14.6.2025) மாலை சுமார் 5.00 மணியளவில் பார்வதிபுரம் கிராமத்திலுள்ள வெங்கலத்து ஏரியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்