வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கொத்தனார் கைது

பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர்.;

Update:2025-10-06 07:52 IST

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள கண்டன்விளை இலுப்பவிளையைச் சேர்ந்தவர் ராஜன்(வயது43), கொத்தனார். சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று கதவை தட்டியுள்ளார். அப்போது அங்கு தனியாக இருந்த 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கதவை திறந்துள்ளார்.

உடனே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ராஜன், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் ராஜன் அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து அந்த பெண் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ராஜன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags:    

மேலும் செய்திகள்