நடிகர் சூரியின் சகோதரர் மீது அதிர்ச்சி புகார்

அச்சகம் நடத்தி வரும் முத்துச்சாமி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.;

Update:2025-05-20 12:44 IST

மதுரை,

மதுரையில் நடிகர் சூரியின் உணவகத்தை நடத்தி வரும் அவரது சகோதரர் லட்சுமணன் மீது அச்சகம் நடத்தி வரும் முத்துச்சாமி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

தான் நடத்தி வரும் அச்சகத்திற்கு கீழ், சூரியின் 'அம்மன் உணவகம்' செயல்பட்டு வரும் நிலையில், உணவகத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் இடையூறு குறித்து இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும்,

இந்த சூழலில் தனது கடைக்குள் அத்துமீறி நுழைந்து, சூரியின் சகோதரர் பணம் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகர் சூரியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவரது சகோதரர் லட்சுமணன் செயல்படுவது அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்