அதிர்ச்சி சம்பவம்.. தூக்கில் தொங்கிய இளம்பெண்: காரணம் என்ன..? - போலீசார் தீவிர விசாரணை

மின்விசிறியில் துப்பட்டாவால் இளம்பெண் தூக்குப்போட்டு தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2025-06-01 18:14 IST


ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள கிழக்கு புது வீதி மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவர் லோகநாதன். தறிப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஜமுனாதேவி (வயது 30). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் இரவு லோகநாதன் தனது மகனை தூக்கி வைத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டு இருந்துள்ளார்.

அப்போது ஜமுனாதேவி திடீரென வீட்டுக்குள் சென்று படுக்கை அறையின் கதவை உள் பக்கமாக தாழ்பாள் போட்டு உள்ளார். இதை கவனித்த லோகநாதன் கதவை திறக்க சொல்லி சத்தம் போட்டுள்ளார். ஆனால் ஜமுனாதேவி கதவை திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மின்விசிறியில் துப்பட்டாவால் ஜமுனாதேவி தூக்குப்போட்டு தொங்கிகொண்டு இருந்தார்.

அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த லோகநாதன் உடனடியாக ஜமுனாதேவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னிமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே ஜமுனாதேவி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் தனியார் மருத்துவமனைக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து ஜமுனாதேவி ஏன் தற்கொலை செய்துகொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்.

ஜமுனாதேவிக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் ஈரோடு ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்