நெல்லை - திருச்செந்தூர் இடையே இன்றும், நாளையும் சிறப்பு ரெயில் இயக்கம்
தசரா திருவிழாவை முன்னிட்டு இன்றும் நாளையும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் இன்று சூரசம்காரம் நடக்கிறது.
இதனையொட்டி, குலசேகரப்பட்டினம் தசரா விழாவுக்காக நெல்லை - திருச்செந்தூர் இடையே இன்றும் நாளையும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் நெல்லைக்கு இரவு 10.30 மணிக்கு வந்தடையும். மறுமார்க்கத்தில் நெல்லையில் இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் திருச்செந்தூருக்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.