சென்னையில் 6 வார்டுகளில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (08.08.2025) 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.;
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (08.08.2025) திருவொற்றியூர் மண்டலம், வார்டு-7ல் கிளாஸ் பேக்டரி சாலையில் உள்ள கே.ஜி. வர்ஷினி அவென்யூ, மாதவரம் மண்டலம், வார்டு-28ல் எம்.ஆர்.எச். சாலை, தபால் பெட்டி அருகிலுள்ள செபாஸ்டியன் ஆலயம், அம்பத்தூர் மண்டலம், வார்டு-85ல் சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை, கே.எஸ்.ஆர். நகரில் உள்ள சாம் மஹால், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-128ல் விருகம்பாக்கம், காமராஜர் சாலையில் உள்ள சமூகநலக்கூடம், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-154ல் இராமாபுரம், சாந்தி நகர் பிரதான சாலையில் உள்ள சாய் உதயம் மஹால், ஆலந்தூர் மண்டலம், வார்டு-163, ஆதம்பாக்கம், நியூ காலனி பிரதான சாலையில் உள்ள லட்சுமி திருமணி மண்டபம் ஆகிய 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.