அண்ணா பல்கலை. வளாக விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

மாணவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-07-24 15:10 IST

சென்னை,

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சபரீசன். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், சபரீசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அழகப்பா கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்