தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி அருகே முடிவைதானேந்தல் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தூத்துக்குடி மத்திய பாகம் போக்குவரத்து காவல் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.;

Update:2025-10-28 13:24 IST

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைதானேந்தல் கிராமம் கிழக்கு தெருவைச் சேர்ந்த வள்ளிநாயகம், தூத்துக்குடி மத்திய பாகம் போக்குவரத்து காவல் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி(48). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த பரமேஸ்வரி கடந்த 26ம் தேதி காலை தனது வீட்டில் படுக்கை அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்