தமிழக வேளாண் பட்ஜெட்: ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்

Update:2025-03-15 08:56 IST
Live Updates - Page 2
2025-03-15 04:14 GMT

 வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பச்சை துண்டு அணிந்து சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்பு! 

2025-03-15 04:13 GMT

தமிழ்நாட்டில் சகுபடி பரப்பு 151 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது: கேழ்வரகு உற்பத்தில் முதலிடம், கரும்பு உற்பத்தியில் 2-வது இடம், நிலக்கடை உற்பத்தியில் 3-வது இடம் வகிக்கிறது.வளர்ச்சியைக் கூட்டி மலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் வேளாண் பட்ஜெட் இருக்கும்- அமைச்சர்

2025-03-15 04:04 GMT

உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மக்கள் பாதுகாப்பார்கள்- அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்

2025-03-15 04:03 GMT

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்து பேசி வருகிறார்.

2025-03-15 03:32 GMT

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். தமிழக வேளாண் நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார்.

2025-03-15 03:28 GMT

பட்ஜெட்டில் வங்கிகளில் வேளாண்மைக்காக வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

2025-03-15 03:27 GMT

கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல் வேளாண்மைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அந்த வகையில், 5-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்