தஞ்சாவூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

தஞ்சாவூரில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.;

Update:2025-06-20 20:49 IST

கோப்புப்படம் 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள அரியாணிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் விக்னேஷ் (19 வயது). பொக்லைன் எந்திரம் ஆப்ரேட்டர். இவர் பணி காரணமாக தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமத்துக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் விக்னேசுக்கு பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மலர்ந்தது. அந்த சிறுமியிடம் விக்னேஷ் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். பின்னர் அவரை தஞ்சை புதிய பேருந்து நிலையம் பகுதியின் பின்புறம் உள்ள ஒரு இடத்துக்கு அழைத்து சென்று விக்னேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்