தூத்துக்குடி: கொலை வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-06-03 19:58 IST

தூத்துக்குடி, திரேஷ்புரம் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த கோபுரத்தான் மகன் காளிமுத்து (வயது 39) என்பவரை கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர்களான கிளாட்சன் மகன் கிஸ்ஸிங்கர்(33), ரெஸ்லிங் மகன் லிவிங்ஸ்டன்(24), தூத்துக்குடி வாட்டர்டேங்க் பகுதியைச் சேர்ந்த ஜோக்கின்ஸ் மகன் மரியஜெர்மன்(25), தூத்துக்குடி வெற்றிவேல்புரத்தைச் சேர்ந்த ராஜா மகன் ரபேக்வேதா(25) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பிழையாளி ஆகியோரை வடபாகம் காவல் நிலைய போலீசார் கூட்டாக சேர்ந்து தாக்கிய குற்றப்பிரிவின் கீழும், கொலை குற்றப்பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ப்ரீத்தா இன்று (3.6.2025) கிஸ்ஸிங்கர், லிவிங்ஸ்டன், மரியஜெர்மன், ரபைக்வேதா ஆகிய 4 பேருக்கு, கூட்டாக சேர்ந்து தாக்கியதற்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் மற்றும் கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல்நிலை காவலர் சிலம்பரசன் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்