தூத்துக்குடி: பைக் விபத்தில் துறைமுக ஊழியர் பலி

தூத்துக்குடி துறைமுக ஊழியர், தனது மோட்டார் பைக்கில் புதிய துறைமுகம்-மதுரை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பைக் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியது.;

Update:2025-06-30 00:06 IST

தூத்துக்குடி, புதிய துறைமுகம், பாரதிநகரைச் சேர்ந்த ஆரோக்கியம் மகன் முனியாண்டி (வயது 58). இவருக்கு நாகவல்லி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் பைக்கில் புதிய துறைமுகம்- மதுரை பைபாஸ் ரோட்டில் டோல்கேட் பாலம் அருகில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென பைக் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தெர்மல்நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷோபாஜென்ஸி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்