ஊட்டி அருகே தேயிலை தோட்டத்தில் புலி நடமாட்டம் - தொழிலாளர்கள் அச்சம்
புலி நடமாட்டத்தால் கிராம மக்கள், தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.;
ஊட்டி,
ஊட்டி அருகே உள்ள தும்மனட்டி கிராமத்தில் சாலையோர தேயிலை தோட்டத்தில் புலி உலா வந்தது. இதை அந்த வழியாக வாகனத்தில் சென்ற சிலர் கண்டதுடன், அதனை செல்போனில் வீடியோ எடுத்தனர். சிறிது நேரம் அப்பகுதியில் நடமாடிய புலி, பின்னர் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புலி நடமாட்டத்தால் கிராம மக்கள், தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
இதுதொடர்பாக ஊட்டி வனச்சரகர் ராம்பிரகாஷ் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் தனியாக யாரும் வேலைக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.