திருச்செந்தூர்: ஆசிரியை அடித்ததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

மாணவன் தனது பெற்றோரிடம் ஆசிரியர்கள் தன்னை பிரம்பால் அடித்ததாக கூறியுள்ளார்.;

Update:2025-06-24 14:29 IST

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் பரமன்குறிச்சி அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (15). பரமன்குறிச்சியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், பள்ளியில் ஆசிரியர்கள் நேற்று மாணவன் முத்துகிருஷ்ணனை அடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவன் தனது பெற்றோரிடம் ஆசிரியர்கள் தன்னை பிரம்பால் அடித்ததாக கூறியுள்ளார். இதனால் பெற்றோர்கள் நாளை பள்ளிக்கு வந்து என்ன என்று விசாரிக்கிறோம் என்று கூறினார்களாம்.

இதனால் மனம் உடைந்த மாணவன் என் சாவுக்கு ஆசிரியர்கள் பியூலா, மேரி, வளர்மதி மற்றும் தலைமை ஆசிரியர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு நேற்று இரவு 8 எட்டு மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்