திருநெல்வேலி: மோட்டார் சைக்கிள் திருட்டு; பெண்ணுக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது

கண்ணநல்லூரில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பற்றி ராஜாவிடம், தங்கலட்சுமி கேட்டபோது பெண் என்று பாராமல் அசிங்கமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.;

Update:2025-05-28 11:44 IST

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர், கண்ணநல்லூரை சேர்ந்த தங்கலட்சுமி (வயது 36) சகோதரர் செம்புலிங்கம் 25.5.2025 அன்று இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. செம்புலிங்கம் அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது தனது மோட்டார் சைக்கிளை அதே ஊரை சேர்ந்த ராஜா(26) திருடி சென்றது தெரிய வந்தது. மோட்டார் சைக்கிள் பற்றி ராஜாவிடம், தங்கலட்சுமி கேட்டபோது பெண் என்று பாராமல் அசிங்கமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து தங்கலட்சுமி வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ராஜாவை நேற்று (27.5.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்