திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
திருநெல்வேலியில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2 மாதங்களாக ஆஜராகாமல் ஒரு வாலிபர் தலைமறைவாக இருந்து வந்தார்.;
திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு ஒரு பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த வழக்கில் தொடர்புடைய சுரேஷ் (வயது 24) கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் சுரேஷ்க்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சுரேஷை தாலுகா காவல்துறையினர் தேடிவந்த நிலையில் நேற்று (3.6.2025) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.