நிஜ வாழ்க்கையிலும் நான் அப்படித்தான் - சரத்குமார்
‘டியூட்' படத்தில் பார்க்கும்படிதான் நிஜ வாழ்க்கையிலும் ஜாலியான ஆள்தான் நான். என் உடலை பார்த்து கோபக்காரன் என்று நிறைய பேர் நினைப்பார்கள். ஆனால் நான் அப்படி இல்லை என்று சரத்குமார் கூறியுள்ளார்.
முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தினரும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச்சட்டமானது, விருப்பம் உள்ளவர்கள் குழந்தைகளை தத்தெடுக்க வழிவகை செய்கிறது. கிறிஸ்தவம், இஸ்லாம் மதம் தத்தெடுப்பை அங்கீகரிக்காவிட்டாலும் அந்த மதத்தினர் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
ரோகித் அரைசதம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா அரைசதம் விளாசியுள்ளார். துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 25 ஓவர்கள் நிலவர்ப்படி இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்துள்ள நிலையில், ரோகித் சர்மா 62 ரன்களுடனும் ஷ்ரேயாஸ் ஐயர் 41 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.
கந்த சஷ்டிக்கு பழனி மலை முருகன் கோவிலுக்கு செல்லாத யானை
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் யானை கஸ்தூரி(58) ஆண்டு தோறும் கந்த சஷ்டி முதல் நாளில் பழனி மலைக்கு யானை பாதை வழியாக சென்று காப்பு கட்டி அங்கேயே 6 நாட்கள் தங்கி இருக்கும். சஷ்டி விழா நாட்களில் தங்க ரத புறப்பாட்டின் போது பங்கேற்கும் சூரசம்ஹாரம் நாளன்று மலையிலிருந்து யானை பாதை வழியாக கீழே இறங்கி கிரி வீதியில் சூரசம்ஹாரத்தில் பங்கேற்கும். அதன் பின் வெற்றி விழாவில் பங்கேற்க பெரியநாயகி அம்மன் கோயில் அருகே யானை தங்கும் இடத்திற்கு வந்து சேரும். இந்தாண்டு மழை பெய்து வருவதாலும், யானை வயது அதிகரித்த காரணத்தினாலும் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி மலை முருகன் கோயிலுக்கு யானை செல்லவில்லை. கிரி வீதியில் நடக்கும் சூரசம்ஹாரத்தில் கோயில் யானை பங்கேற்கும்.