இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 05-03-2025

Update:2025-03-05 09:22 IST
Live Updates - Page 2
2025-03-05 07:42 GMT

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகளை பூமி பூஜையுடன் இஸ்ரோ தொடங்கியது.

2025-03-05 07:41 GMT

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சரக்கு லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் முனிகிருஷ்ணன், பசவராஜ் மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். தருமபுரி அருகே ஜிட்டாண்டஅள்ளி பிரிவு சாலை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

2025-03-05 07:39 GMT

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான முதல்-அமைச்சரின் தீர்மானத்திற்கு அனைத்து பிரதான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. 

2025-03-05 07:36 GMT

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மிகச்சிறப்பான கூட்டத்தை கூட்டியுள்ளது. மாநில அரசின் தீர்மானத்தை தேமுதிக முழுமையாக ஆதரிக்கிறது என்று தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

2025-03-05 07:03 GMT

தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய ‘கூட்டு நடவடிக்கை குழு'வை விசிக வரவேற்கிறது, ஆதரிக்கிறது என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.

2025-03-05 07:02 GMT

தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் அனைத்து தென் மாநில முதலமைச்சர்களை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்

2025-03-05 06:51 GMT

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அறிவித்துள்ளார். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் ஸ்டீவ் ஸ்மித் அறிவித்துள்ளார்.

2025-03-05 06:40 GMT

தென் இந்தியாவில் மக்கள்தொகை குறைவாக இருப்பதால் மறுசீரமைப்பு நியாயமாக இருக்காது. தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது. தற்போதுள்ள எண்ணிக்கையே தொடர வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில்  தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார். 

2025-03-05 06:39 GMT

தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடாது என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

2025-03-05 06:20 GMT

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே 7 மாத ஆண் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. உடற்கூராய்வில் பலூனை விழுங்கியதால் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்