இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-09-2025

Update:2025-09-08 08:58 IST
Live Updates - Page 2
2025-09-08 12:08 GMT

தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் உடனடியாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம், தமிழக அரசு மற்றும் பிற மாநில அரசுகள் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

2025-09-08 12:01 GMT

கண்ணாடி பாலம் உறுதியாக உள்ளது - கன்னியாகுமரி கலெக்டர் தகவல்

கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தில் பெயின்ட் அடிக்கும் பணியின் போது சுத்தியல் விழுந்ததில் சிறிய கீறல் மட்டுமே ஏற்பட்டது. அதனை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலம் உறுதியாக உள்ளதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று அம்மாவட்ட கலகெடர் அழகு மீனா கூறியுள்ளார்.

2025-09-08 11:57 GMT

நேபாள பிரதமர் ஆலோசனை

சமூக பேஸ்புக், வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ச வலைதளங்களை தடை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேபாளத்தில் அரசுக்கு எதிராக புரட்சி வெடித்துள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

2025-09-08 11:55 GMT

வேலூர் இப்ராஹிம் கைது

கிட்னி திருட்டு தொடர்பான ஆவணங்களைக் கேட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தகராறு செய்த புகாரில் பாஜ நிர்வாகி வேலூர் இப்ராஹிம் கைது செய்யப்பட்டார்.

2025-09-08 11:33 GMT

டெட் தேர்வுக்கு10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2025-09-08 11:29 GMT

நேபாளத்தில் போராட்டம் - 16 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்திய போலீஸ். 16 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயம் என தகவல் வெளியாகி உள்ளது. நேபாளத்தில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தடைக்கு எதிராக நேபாள மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

2025-09-08 11:27 GMT

இனிமேல் சுதந்திர மனிதன் - மல்லை சத்யா

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.. அல்ல அல்ல.. ‘மகன் திமுக'வில் இருந்து நாங்கள் விடுதலை பெற்றிருக்கிறோம் என்றுதான் பார்க்கிறேன். இனிமேல் நாங்கள் சுதந்திர மனிதனாக செயல்பட முடியும் என்று மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா கூறியுள்ளார்.

2025-09-08 10:22 GMT

ரிதன்யா வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் எந்த பலனும் இல்லை - சென்னை ஐகோர்ட்டு

திருப்பூர் இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும் உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய விசாரணை நீதிமன்றத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது தந்தை அண்ணாதுரை மனு தாக்கல் செய்திருந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் எந்த பலனும் இல்லை என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

2025-09-08 10:22 GMT

துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் பிஜு ஜனதா தளம் கட்சி

நாளை நடைபெறவுள்ள துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக பிஜு ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் 7 எம்.பி.க்களை பிஜு ஜனதா தளம் கட்சி கொண்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணிகளிடம் இருந்து சம தூரத்தில் தாங்கள் இருப்பதாகவும், ஒடிசாவின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதே தங்களுக்கு முக்கியம் எனவும் எம்.பி. சஸ்மித் பத்ரா கூறியுள்ளார்.

2025-09-08 10:21 GMT

மல்லிகைப் பூவால் அபராதம் செலுத்திய நடிகை நவ்யா நாயர்

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் விமான நிலையத்தில் கைப் பைக்குள் மல்லிகைப்பூ வைத்திருந்ததால் நடிகை நவ்யா நாயருக்கு இந்திய மதிப்பில் ரூ.1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் BIOSECURITY பையோ செக்யூரிட்டி மற்றும் சுங்க விதிகளின்படி பூக்கள், செடிகளை இறக்குமதி செய்யத் தடை உள்ளது. இதை அறியாமல், மெல்பர்னில் தரையிறங்கியதும் தலையில் வைப்பதற்கு 15 செ.மீ. மல்லிகைப் பூ கொண்டு சென்றதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்