இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025

Update:2025-08-13 09:35 IST
Live Updates - Page 2
2025-08-13 10:59 GMT

சுதந்திர தினத்தையொட்டி குமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

2025-08-13 10:37 GMT

கோவையில் போராட்டம்

சென்னையைத் தொடர்ந்து கோவையிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் குதித்தனர்.

2025-08-13 10:35 GMT

அப்பாவு கார் முற்றுகை

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு காரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். முறையாக குடிநீர் வழங்க மறுப்பதாகக் கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

2025-08-13 10:34 GMT

நடவடிக்கை பாயும்

போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1)ன் கீழ் கடுமையான நடவடிக்கை பாயும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

2025-08-13 10:31 GMT

தூய்மை பணியாளர்களுக்கு இறுதி எச்சரிக்கை

சென்னை ரிப்பன் மாளிகையில் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என காவல்துறை இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

2025-08-13 10:30 GMT

கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்

சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்த மாணவர் விடுதியின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து பலியானதாக கூறப்படுகிறது. மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025-08-13 10:27 GMT

சுதந்திர நாள் விழாவில் பங்கேற்க கவர்னர் அழைப்பு - விசிக புறக்கணிப்பு

வழக்கம்போல கவர்னர் ரவி சுதந்திர நாள் விழாவில் பங்கேற்கும்படி விசிகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக அவருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.வழக்கம்போல அவ்விழாவில் விசிக பங்கேற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என விடுதலை கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-08-13 07:53 GMT

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி, ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (13-08-2025) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

2025-08-13 07:45 GMT

சுதந்திர தினத்தன்று கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் கட்சிகள்

சுதந்திர தினத்தன்று கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கப்பதாக காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்