இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 15-09-2025

Update:2025-09-15 08:58 IST
Live Updates - Page 2
2025-09-15 08:51 GMT

ரேபிஸ் தடுப்பு: சுகாதாரத் துறை விளக்கம்

நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. நாய் கடித்த இடத்தை உடனே சோப்பு, சுத்தமான நீர், கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும். நாய் கடித்த காயத்தில் மிளகாய், கடுகு எண்ணெய் போன்ற எதையும் தேய்க்கக் கூடாது. நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசியின் அனைத்து தவணைகளையும் செலுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.

2025-09-15 08:43 GMT

பாஜகவின் சட்டவிரோத திருத்தங்களை நீக்கும் முக்கிய நகர்வு - மு.க.ஸ்டாலின்

நீதிமன்ற உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

2025-09-15 08:37 GMT

திடீரென விழுந்த ராட்சத மரம்

சென்னை கே.கே.நகர் 80 அடி சாலையில் திடீரென ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 20 நாட்களுக்கு முன் மழைநீர் வடிகால் பணி நடந்தபோது பள்ளம் தோண்டி மூடப்பட்டது. பள்ளம் தோண்டியபோது மரத்தின் வேர்களை வெட்டியதால்தான் மரம் விழுந்ததாக மக்கள்  குற்றம் சாட்டி உள்ளனர்.

2025-09-15 08:36 GMT

பாமக தலைவர் அன்புமணிதான் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் - பாமக வழக்கறிஞர் கே.பாலு

பாமக தலைவர் அன்புமணிதான் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. பாமக தலைவராக அன்புமணியை ஆகஸ்ட் 2026 வரை நீட்டித்து அனுமதி வழங்கியிருக்கிறார்கள்; தி.நகர் திலக் தெருவில் உள்ள முகவரியை பாமக தலைமை அலுவலகமாக ஆணையம் அங்கீகரித்துள்ளது என்று பாமக வழக்கறிஞர் கே.பாலு கூறியுள்ளார்.

2025-09-15 08:27 GMT

நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - மத்திய அரசு விளக்கம்

நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. அதன்படி நாய் கடித்த காயத்தை உடனடியாக சோப்பு, சுத்தமான நீர், கிருமி நாசினி மூலம் கழுவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், நாய் கடித்த உடன் சிகிச்சை எடுக்க வேண்டும் எனவும், நாய் கடித்த காயத்தின் மீது மிளகாய், கடுகு, எண்ணெய் போன்ற எதையும் தேய்க்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று ரேபிஸ் தடுப்பூசியின் அனைத்து தவணைகளையும் முறையாக செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

2025-09-15 07:59 GMT

நாகேசின் பேரன் நடித்த ''உருட்டு... உருட்டு...''- சினிமா விமர்சனம்

நாகேசின் பேரன் கஜேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம்.

குடித்துவிட்டு ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் கஜேசை, உருகி உருகி காதலிக்கிறார் ரித்விகா ஸ்ரேயா. ஆனால் கஜேஷ், மதுவில் மட்டுமே நாட்டமுடன் இருக்கிறார். 

2025-09-15 07:54 GMT

அமெரிக்காவில் இந்தியர்-வம்சாவளி நபர் கொலை; குடியேற்றக் கொள்கையை சாடிய டிரம்ப்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட குடியேற்றக் கொள்கைகளை, தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார். டல்லாஸ் நகரில் மிகவும் மரியாதையுடன் வாழ்ந்து வந்த நாகமல்லையா என்பவர், அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், அவரை கொலை செய்தவர் கியூபாவில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டவிரோதமாக குடியேறிய குற்றவாளிகளிடம் மென்மையாக நடந்து கொள்ளும் வழக்கம் இனி முடிவுக்கு வரும் எனவும் டிரம்ப் கூறியுள்ளார். 

2025-09-15 07:39 GMT

தீபாவளிக்கு எத்தனை நாள் விடுமுறை தெரியுமா?

தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இப்போதே கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.

2025-09-15 07:37 GMT

''சாதியால் மகளின் காதலுக்குத் தடைபோடும் தாய்'': ''காயல்'' - திரைப்பட விமர்சனம்

சாதியைக் காரணம் காட்டி, தன் மகளின் காதலுக்குத் தடைபோடும் ஓர் அம்மாவின் வறட்டு பிடிவாத கதை.

லிங்கேசும், காயத்ரியும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். இந்த காதலுக்கு காயத்ரியின் அப்பா ஐசக் சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால், லிங்கேசின் சாதியை காரணம் காட்டி காதலை ஏற்க மறுக்கிறார், காயத்ரியின் தாய் அனுமோல். 

2025-09-15 07:36 GMT

தாத்தா, அப்பா, மகன்...மூன்று தலைமுறை ஹீரோக்களுடன் நடித்த ஒரே கதாநாயகி - யார் தெரியுமா..?

அக்கினேனி நாகேஸ்வரராவ் முதல் அக்கினேனி அகில் வரை...தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறை ஹீரோக்களுடன் நடித்த ஒரே கதாநாயகி யார் தெரியுமா..? ஒரு காலத்தில் அவர் தமிழில் தொடங்கி பாலிவுட் வரை தனது நடிப்பால் மக்களின் இதயங்களை வென்றார். 

Tags:    

மேலும் செய்திகள்