இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025

Update:2025-09-19 09:20 IST
Live Updates - Page 2
2025-09-19 09:29 GMT

'அட்டகத்தி' தினேஷின் ''தண்டகாரண்யம்'' - சினிமா விமர்சனம்

பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞராக எதார்த்த நடிப்பால் தினேஷ் கவனிக்க வைக்கிறார். அநியாயங்களுக்கு எதிராக அவர் பொங்கி எழும் இடங்களில் சிலிர்ப்பு.

2025-09-19 09:14 GMT

தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

சேலம் : எடப்பாடி பகுதியில் சுற்றித்திரியும் 200க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கவுண்டம்பட்டி, ஹவுசிங் போர்டு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திரியும் நாய்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் தடுப்பூசி போடப்பட்டது.

2025-09-19 09:12 GMT

போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

போர்ச்சுகலில் நடைபெறவுள்ள World Beach Ultimate Challenge போட்டியில் பங்கேற்கும் இந்திய Flying Disc India Masters மகளிர் அணியில் உள்ள தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு ரூ.6 லட்சம் நிதி வழங்கிய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

2025-09-19 09:10 GMT

''கல்கி 2'' - தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார்?

மிகவும் எதிர்பார்க்கப்படும் கல்கி 2-ல் இருந்து பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் விலகிவிட்டார். இனி அவர் இந்தத் திட்டத்தில் பங்கேற்கமாட்டார் என்பதை அனைவரும் அறிந்திருப்போம்.


2025-09-19 08:48 GMT

மருத்துவமனைக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டுப்பன்றி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அரசு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இதில் தினந்தோறும் ஏராளமான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்று மருத்துவமனைக்குள் திடீரென ஒரு காட்டுப்பன்றி புகுந்தது. 

2025-09-19 08:23 GMT

சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்


கிண்டி:

லேபர் காலனி, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், டி.எஸ். மினி, பாலாஜி நகர், நாகிரெட்டித்தோட்டம், ஈக்காட்டுதாங்கல், காந்தி நகர் பிரதான சாலை, சர்தார் காலனி, ஜே.என்.சாலை, கலைமகள் நகர், அச்சுதன் நகர் 1வது பிரதான சாலை, அருளையம்பேட்டை, தெற்கு மற்றும் வடக்கு கட்டம். முத்துராமன் தெரு.கணபதி காலனி, டின்னி செக்டார், லேசர் தெரு.

2025-09-19 08:20 GMT

இலங்கை வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை மறைவு... சோகத்தில் முடிந்த வெற்றி


இலங்கை வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை உயிரிழந்த செய்தியானது அந்த அணி வீரர்களை மட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. துனித் வெல்லாலகேவிற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். தற்போது வெல்லாலகே தாயகம் திரும்பியுள்ளார். இதனால் அவர் மீண்டும் ஆசிய கோப்பையில் விளையாடுவாரா? இல்லையா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.


2025-09-19 08:13 GMT

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை

ஷரியா சட்டத்துடன் முரண்படுவதாகக்கூறி ஆப்கானிஸ்தான் பல்கலை. பாடங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. 

2025-09-19 08:10 GMT

வேலூர் காவலர் பயிற்சி பள்ளிக்கு வேலு நாச்சியார் பெயர் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலையை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் இன்று காலை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.




2025-09-19 08:07 GMT

தவெக தலைவர் விஜய் நாளை பரப்புரை மேற்கொள்ளும் இடம், நேரம் அறிவிப்பு


தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அந்த வகையில், நாளை (சனிக்கிழமை) நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.


Tags:    

மேலும் செய்திகள்