இந்தியா - ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் கிரிக்கெட்: மீண்டும் தொடங்கியது: போட்டி 35 ஓவர்களாக குறைப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருபோட்டியில் இந்திய அணி 11.5 ஓவர்களில் 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ரோகித் சர்மா 8 ரன்களும், சுப்மன் கில் 10 ரன்களும், விராட் கோலி (0) ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர். தற்போது ஸ்ரேயாஸ் அய்யர், அக்சர் படேல் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் மழை நிறுத்தப்பட்ட ஆட்ட,ம் தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. இதனிடையே போட்டி 35 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழித்தது அமெரிக்கா
போதைப் பொருள் நீர்மூழ்கி கப்பல் மட்டும் அமெரிக்காவுக்குள் வந்திருந்தால் 25,000 அமெரிக்கர்கள் உயிரிழந்திருப்பார்கள் என்று டிரம்ப் கூறினார்.
நாளை தீபாவளி பண்டிகை... கங்கா ஸ்னானம் செய்ய மறக்காதீங்க..!
தீபாவளி அன்று சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்துக்கும், கங்கையின் புனிதத்தை வழங்வதாக ஐதீகம்.
ரெயில் சேவை குறித்து தவறான வீடியோக்களை பகிர்ந்தால் நடவடிக்கை - இந்திய ரெயில்வே எச்சரிக்கை
உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் வீடியோக்களை பகிரக்கூடாது என இந்திய ரெயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மதியம் 1 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆஷஸ் தொடர்: கம்மின்ஸ் இல்லையென்றால் யார் கேப்டன் ? ஜார்ஜ் பெய்லி பதில்
முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் அடுத்த மாதம் 21-ந் தேதி தொடங்குகிறது.
ராமதாஸ், அன்புமணி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
விழுப்புரம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டுக்கும், சென்னை தியாகராயர் நகரில் உள்ள அன்புமணி வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இமெயில் மூலம் வந்த மிரட்டலையடுத்து தைலாபுரம் இல்லத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் மேற்கொண்ட சோதனையில் அது புரளி என தெரியவந்தது.
திமுக கூட்டணி வேண்டாம் என நான் கூறினால்... திருமாவளவன் பரபரப்பு பேச்சு
திமுக கூட்டணியை பாதுகாக்கும் இயக்கமாக விசிக இருக்கிறது என்று திருமாவளவன் கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு
அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஐந்துவீடு அருவியில் குளித்த மருத்துவ மாணவர் திடீர் மாயம் - நீரில் அடித்துச் செல்லப்பட்டாரா..?
ஐந்துவீடு அருவியில் குளிக்கும் போது. மாயமான மருத்துவக் கல்லூரி மாணவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.