தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பில்லை.. அதிமுக அமளி, வெளிநடப்பு
எதிர்க்கட்சியான அதிமுகவும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது. தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் தெரிவித்து அதிமுகவினர் சட்டசபையை விட்டு வெளியேறினர். தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய சிறிது நேரத்தில் கவர்னர் வெளியேறியது மற்றும் அதிமுகவினர் வெளிநடப்பு போன்றவற்றால் சட்டசபை வளாகம் பரபரப்புடன் காணப்படுகிறது.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? கவர்னர் மாளிகை விளக்கம்
கவர்னர் உரையில் ஆதாரமற்ற பல கூற்றுகள் இருந்தது என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
குடியரசு தின கொண்டாட்டம்; 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு
அழைப்பிதழில் உள்ள விவரங்களை கவனத்துடன் படித்து அதன்படி நடந்து கொள்ளும்படி சிறப்பு விருந்தினர்களை டெல்லி போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.
கவர்னரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து கவர்னர் வெளியேறினார்.
மகர விளக்கு பூஜை நிறைவு: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு
நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவாக இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி சாமி தரிசனத்திற்கு பிறகு நடை அடைக்கப்பட்டது. அத்துடன் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுடன், தை மாத பூஜை வழிபாடுகளும் நிறைவு பெற்றது.
மீண்டும் வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன.?
இன்று தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,08,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,610-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழக சட்டசபை கூடியது: 4-வது ஆண்டாக உரையை புறக்கணித்து வெளியேறினார் கவர்னர் ஆர்.என்.ரவி
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
கிரீன்லாந்து விவகாரம்; ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிப்பதில் 100 சதவீதம் உறுதி: டிரம்ப்
இங்கிலாந்து மற்றும் நேட்டோவின் பிற 7 உறுப்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என டிரம்ப் உறுதியுடன் கூறினார்.
யு19 உலகக்கோப்பை: தென்ஆப்பிரிக்கா முதல் வெற்றி
16 அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்டவருக்கான (யு19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது .பிப்ரவரி 7-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.
ஒலிம்பிக்கில் விளையாடுவதே இலக்கு- ஸ்மித்
ஒலிம்பிக்கில் விளையாடுவதே தனது முக்கிய இலக்கு என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். தற்போது பிக்பாஷ் டி20 லீக் போன்ற தொடர்களில் அபாரமாக விளையாடி வருவதன் மூலம் தனது ஒலிம்பிக் கனவை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.