இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-01-2025

Update:2025-01-24 09:22 IST
Live Updates - Page 3
2025-01-24 06:15 GMT

தேர்தல் காலங்களில் ஆளுங்கட்சியை எதிர்த்து எதிரணியில்தான் அனைவரும் ஒன்று சேர்வார்கள். ஆனால், இன்று எதிர்க்கட்சியில் இருந்த நீங்கள், ஆளுங்கட்சியில் உங்களை இணைத்துள்ளீர்கள் என்றால் 2026 தேர்தல் முடிவுகள் உங்களுக்கு தெரிந்திருக்கக் கூடிய ஒன்றுதான். இதை பார்க்கும் போது எதிர்க்கட்சியினருக்கு வயிற்று எரிச்சல் வரத்தான் செய்யும். அதற்காகவே மீண்டும் உங்களுக்கு பாராட்டும், வாழ்த்தும் என நாதகவினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

2025-01-24 05:34 GMT

பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வரும் நிலையில், நேற்று வரை திரிவேணி சங்கமத்தில் 10.21 கோடி பக்தர்கள் புனித நீராடியிருப்பதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

2025-01-24 05:32 GMT

நாதக உட்பட மாற்று கட்சியை சேர்ந்த சுமார் 3,000 பேர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

2025-01-24 05:23 GMT

சென்னையில் 2வது பெரிய மெட்ரோ நிலையமாக உருவாகி வருகிறது பனகல் பார்க் மெட்ரோ ரெயில் நிலையம். இந்த மெட்ரோ நிலையம் ஒரே நேரத்தில் 5000 பேர் பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டு வருகிறது.

2025-01-24 05:04 GMT

சென்னை நீலாங்கரையில், சட்டவிரோதமாக வீட்டில் உருட்டுக்கட்டைகளுடன் கூடியதாக சீமான் உள்பட 181 பேர் மீது நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

2025-01-24 04:33 GMT

அமெரிக்கர்கள் அல்லாதவர்களுக்கு பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை ரத்து என்ற ஜனாதிபதி டிரம்பின் உத்தரவுக்கு சியாட்டில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

2025-01-24 04:29 GMT

திருப்பதியில் திருமணம் செய்து கொண்டு கணவர், குழந்தைகளுடன் வாழ வேண்டும் என்பதே தனது ஆசை என்று நடிகை ஜான்வி கபூர் கூறியுள்ளார்.

2025-01-24 04:27 GMT

சத்தீஷ்காரில் 16 வயது பழங்குடியின சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, கல்லால் அடித்துக் கொன்று காட்டில் வீசிய வழக்கில் ஐந்து பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோர்பா மாவட்ட விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

2025-01-24 04:25 GMT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.60,440க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,555க்கு விற்பனை ஆகிறது.

2025-01-24 04:01 GMT

எம்.பி.ஏ. எம்.இ. மேற்படிப்புகளுக்கான டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2025-26ஆம் கல்வியாண்டுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு மார்ச் 22ஆம் தேதியும், சீட்டா நுழைவுத் தேர்வு மார்ச் 23ஆம் தேதியும் நடைபெறுகிறது. பிப்.21ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்