வாக்கு திருட்டு; தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
பா.ஜனதா தோல்வியடையும் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் வாக்காளர்கள் அந்த அமைப்பிலிருந்து நீக்கப்படுகிறார்கள் என ராகுல் காந்தி சாடியுள்ளார்.
ஆபாச வீடியோ வழக்கு; சத்தீஷ்கார் முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் விடுவிப்பு ரத்து
பூபேஷ் பாகல் இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர்: நாளை மறுநாள் நடைபெறுகிறது அனைத்துக்கட்சி கூட்டம்
இந்த கூட்டத்தில், கூட்டத்தொடரின் முக்கிய அம்சங்கள் மற்றும் விவாதங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கேரள அரசின் புத்தாண்டு பம்பர் லாட்டரி குலுக்கல்:ரூ.20 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார்?
முதல் பரிசு வென்ற டிக்கெட்டை கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த முகவர் சுதீக் என்பவர் விற்றுள்ளார்.
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி: கைப்பற்றிய பகுதிகளை திரும்பி தர மறுக்கும் ரஷியா
அபுதாபியில் ரஷியா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மதுரையில் ஆம்னி பஸ்கள் விபத்து: 3 பயணிகள் பலி, 15 பேர் படுகாயம்
விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு
அன்னைத் தமிழை காக்க தன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.
இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள்: தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாக இருந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 510 காசுகளாக அதிகரித்து உள்ளது.