இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-01-2026

Update:2026-01-25 09:49 IST
Live Updates - Page 5
2026-01-25 04:30 GMT

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள்: தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை 


தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

2026-01-25 04:28 GMT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு 


நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாக இருந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 510 காசுகளாக அதிகரித்து உள்ளது.

2026-01-25 04:25 GMT

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை 


சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், சென்ட்ரல், காமராஜர் சாலை, மெரினா உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகர் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

2026-01-25 04:24 GMT

3வது டி20: இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல் 


இந்தியா, நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 

2026-01-25 04:21 GMT

கூட்டணியா.. தனித்து போட்டியா..? - என்ன சொல்லப் போகிறார் விஜய்..? - இன்று த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் 


இன்று (ஞாயிற்றுக்கிழமை) த.வெ.க. தலைவர் விஜய், கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேச இருக்கிறார். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கும் த..வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் அரசியல் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து விஜய் பேச இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இக்கூட்டத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்க இருக்கின்றனர்.

2026-01-25 04:20 GMT

இன்றைய ராசிபலன் (25.01.2026): உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும் நாள்..! 


கன்னி

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ய்புள்ளதால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

Tags:    

மேலும் செய்திகள்