இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-03-2025

Update:2025-03-30 09:30 IST
Live Updates - Page 3
2025-03-30 05:26 GMT

போளூர், செங்கம், கன்னியாகுமரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி ஆகிய 7 புதிய நகராட்சிகள் உதயமாகிறது.

2025-03-30 05:25 GMT

தெலுங்கு, கன்னட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் உகாதி திருநாள் வாழ்த்துகள். அன்பு, அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிலைத்து, சகோதரத்துவம் தழைத்தோங்கட்டும் என தவெக தலைவர் விஜய் உகாதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2025-03-30 05:24 GMT

ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால், அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஓடுதளத்தில் உரிய முன்னேற்பாடுகளுடன் விமான நிலைய பணியாளர்கள் இருந்த நிலையில், சாதுரியமாகச் செயல்பட்ட விமானி அசம்பாவிதம் இன்றி விமானத்தைத் தரையிறக்கினார்.

2025-03-30 04:37 GMT

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி மறுத்து வரும் நிலையில் செங்கோட்டையன் மூலம் ஒங்கிணைந்த அதிமுகவை உருவாக பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2025-03-30 04:07 GMT

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில், பங்குனி உற்சவ தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

2025-03-30 04:06 GMT

எகிப்தின் பணய கைதி விடுவிப்பு மற்றும் போர்நிறுத்த ஒப்பந்தம் ஆகியவற்றுக்கான செயல் திட்டம் ஒன்றை வழங்கியது. இதற்கு ஹமாஸ் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, அமெரிக்க இஸ்ரேலியரான ஈடன் அலெக்சாண்டர் உள்பட 5 பணய கைதிகளை விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த 5 பணய கைதிகளுக்கு ஈடாக, முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்த நிபந்தனைகளின்படி இஸ்ரேல் நடந்து கொள்ள வேண்டும் என ஹமாஸ் அமைப்பு எதிர்பார்க்கிறது. அதனுடன், நிவாரண பொருட்களையும் காசாவுக்குள் அனுமதிக்க வேண்டும் உள்பட 2-ம் கட்ட போர் போர்நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது.

எகிப்தின் இந்த செயல் திட்டத்திற்கு ஈடாக, இஸ்ரேலும் பதிலுக்கு செயல் திட்டம் ஒன்றை அளித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, 5 பணய கைதிகள் விடுவிப்புக்கு ஈடாக, காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வழிவகுக்கும் என இஸ்ரேலின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2025-03-30 04:06 GMT

தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் முழுவதும் சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் 4வது நாளாக இன்றும் தொடர்கிறது. எண்ணெய் நிறுவனங்களின் புதிய ஒப்பந்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

2025-03-30 04:06 GMT

தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டியையையொட்டி திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

2025-03-30 04:05 GMT

நாக்பூர் ஸ்மிருதி மந்திரில் இன்று நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். 

2025-03-30 04:05 GMT

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை-ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. அசாமின் கவுகாத்தியில் நடக்கும் போட்டி இன்றிரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்