இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-12-2025

Update:2025-12-03 09:42 IST
Live Updates - Page 6
2025-12-03 04:19 GMT

இங்கிலாந்தில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம் - மறுபரிசீலனை செய்ய அரசு வலியுறுத்தல்


இங்கிலாந்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அங்குள்ள டாக்டர்கள் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி கடந்த மாதம் வேலை நிறுத்த போராட்டத்தில் டாக்டர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்ட குழுவினருடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

2025-12-03 04:17 GMT

தொடர்மழை எதிரொலி.. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு..! 


செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2025-12-03 04:16 GMT

காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்த தாழ்வு மண்டலம்.. அடுத்துவரும் நாட்களில் மழைக்கான வாய்ப்புள்ளதா..? 


நேற்று காலை தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்த நிலையிலும், வட மாவட்டங்களில் மழையை கொடுத்தபடியே இருந்தது. பின்னர், சென்னையையொட்டிய கடல் பகுதிகளிலேயே தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், தாழ்வுப் பகுதியாகவும் வலுகுறைந்து போனது.

2025-12-03 04:15 GMT

கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..? 


கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் இன்று (புதன்கிழமை) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

இதேபோல், ராணிப்பேட்டை (அரக்கோணம், நெமிலி வட்டம்), கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

2025-12-03 04:14 GMT

இன்றைய ராசிபலன் (03.12.2025): குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்...! 


சிம்மம்

நண்பர்கள் வகையில் உதவிகள் உண்டு. திருமணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். வழக்கு சாதகமாக முடியும். மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவர். வழக்கு சாதகமாகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் 

Tags:    

மேலும் செய்திகள்