இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 4 Jun 2025 7:49 PM IST
2027ம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு - மத்திய அரசு
இரண்டு கட்டங்களாக 2027ம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
- 4 Jun 2025 7:46 PM IST
கர்நாடக முதல்-மந்திரி ஆறுதல்
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்களை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
- 4 Jun 2025 7:18 PM IST
கர்நாடக முதல்-மந்திரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - கர்நாடக பாஜக
ஆர்சிபி ஐபிஎல் கோப்பை வென்றதை கொண்டாடும் நிகழ்வில் கூட்ட நெரிசலில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், ஆர்சிபி வெற்றி பேரணி உயிரிழப்பு தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பெங்களூரு துயர சம்பவத்திற்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா முழு பொறுபேற்க வேண்டும். அவசர அவசரமாக வெற்றிப்பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர். கர்நாடக அரசு முன்னேற்பாடுகள் செய்யவில்லை. சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை தேவை கர்நாடக பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா கூறியுள்ளார்.
- 4 Jun 2025 7:05 PM IST
பெங்களூருவில் 3 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்
ஆர்சிபி கிரிக்கெட் வீரர்களை வரவேற்க குவிந்த ரசிகர்களின் கூட்டம் காரணமாக விதான் சவுதா, கப்பன் பார்க், எம்.ஜி.சாலை மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டது.
- 4 Jun 2025 6:58 PM IST
சின்னசாமி மைதானம் அருகே உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் மூடல்
பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெரிசலில் சிக்கி ஒரு சிறுமி உட்பட 10 பேர் உயிரிழந்தாக கூறப்படுகிறது.
- 4 Jun 2025 6:32 PM IST
மன்னிப்பு கோரினார் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்
ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பெங்களூரு மற்றும் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
- 4 Jun 2025 6:25 PM IST
மருத்துவமனை விரைகிறார் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா
ஆர்சிபி ஐபிஎல் கோப்பை வென்றதை கொண்டாடும் நிகழ்வில் கூட்ட நெரிசலில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் 10 நிமிடங்களில் கொண்டாட்ட நிகழ்வுகள் முடிவுக்கு வந்தன. வீரர்களை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கவுரவித்து அவசர அவசரமாக மருத்துவமனை புறப்பட்டுச்சென்றார். நெரிசலில் சிக்கி சிகிச்சை பெறுவோரை சந்திக்க முதல்-மந்திரி சித்தராமையா மருத்துவமனை விரைகிறார்.
- 4 Jun 2025 6:03 PM IST
"மதுவிலக்கை அமல்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும்" - மதுரை ஐகோர்ட்டு
மதுபான கடைகளை கூடுதலாக நிறுவுவதற்கு பதிலாக மதுவிலக்கிற்கு உறுதியான நடவடிக்கைகளை முயற்சிக்க வேண்டும். வழக்கு ஒன்றில் திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை 2 வாரத்தில் மூட மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- 4 Jun 2025 4:46 PM IST
ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்வு
ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.4000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சி,டி பிரிவு ஓய்வூதியதாரர்கள், தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.