இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-11-2025

Update:2025-11-06 09:20 IST
Live Updates - Page 3
2025-11-06 09:19 GMT

பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை - ஜெயக்குமார் பேட்டி

அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் சில முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பான கூட்டத்திற்குப்பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுக ஆட்சியில் விருப்பு, வெறுப்பின்றி பிற கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை, அதனை எந்த காலத்திலும் தடை செய்யக்கூடாது. அனைவருக்கும் சமம் என்ற முறையில் விதிகளை வகுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

2025-11-06 08:01 GMT

12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2025-11-06 07:56 GMT

4-வது டி20: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு


இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

2025-11-06 07:53 GMT

துல்கர் சல்மானின் "காந்தா" பட டிரெய்லர் வெளியானது!


துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ நடித்துள்ள ‘காந்தா’ படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாக உள்ளது.

2025-11-06 07:08 GMT

2026 தேர்தலில் திமுக -தவெக இடையேதான் போட்டி - டிடிவி தினகரன்

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது:-

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை தேர்தலுக்கு பிறகே நடத்த வேண்டும். சிறப்பு தீவிர திருத்த படிவத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் தள்ளிப்போட வேண்டும். சாமானிய மக்களுக்கு SIR படிவத்தை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படும்.

அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையேதான் நேரடிப் போட்டி இருக்கும். விஜயின் வருகையால் அடுத்த தேர்தலில் அதிமுக 3ஆவது இடத்திற்கு தள்ளப்படும். அதிமுக ஆட்சிக்கு வருவதைவிட பொதுச்செயலாளர் பதவியை விட்டுவிடக் கூடாது என பழனிசாமி நினைக்கிறார். எடப்பாடி பழனிசாமியுடன் நான் சேர்வதற்கான வாய்ப்பே இல்லை. எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தாமல் நான் ஓய மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

2025-11-06 06:40 GMT

நெல்லை தொகுதியில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்.. திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை


கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.


2025-11-06 06:36 GMT

கோவை பாலியல் சம்பவத்துக்கு எதிராக அஞ்சு குரியன், கவுரி கிஷன் கருத்து


சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்று நடிகை அஞ்சு குரியன் கூறியுள்ளார்.

2025-11-06 06:34 GMT

மகளிர் பிரீமியர் லீக்: ஆர்சிபி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரர் நியமனம்


கடந்த 2 சீசன்களாக பெங்களூரு அணியின் உதவி பயிற்சியாளராக இவர் செயல்பட்டுள்ளார்.

2025-11-06 05:54 GMT

அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது

அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

2025-11-06 05:40 GMT

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு


சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்