அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு காரில் அழைத்து சென்றனர். கே.என்.நேருவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
"50 ரூபாய் செலுத்தி குடும்ப அட்டை"- அமைச்சர் சக்கரபாணி
குடும்ப அட்டை தொலைந்தவர்கள் 50 ரூபாய் செலுத்தி குடும்ப அட்டை நகலை பெற்று பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். 2023 ஏப்ரல் 5 அன்று துவங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி குடும்ப அட்டையை தொலைத்த 9 லட்சத்து 44ஆயிரத்து 452 நகல் குடும்ப அட்டைகள் வழங்கப்பப்பட்டுள்ளன- அமைச்சர் சக்கரபாணி
டாஸ்மாக் வழக்கில் மாநில உயர்நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. ஐகோர்ட்டு முடிவின்படி விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு கூறியதால் வழக்கை தமிழக அரசு திரும்பப்பெற்றது.
“ஒரு அரசியலமைப்பு எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அதனை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால், அது மோசமானதாகவே இருக்கும்” என தமிழ்நாடு அரசு vs கவனர் வழக்கில், அண்ணல் அம்பேத்கரின் கூற்றை மேற்கோள் காட்டி தீர்ப்பை நிறைவு செய்தார் நீதிபதி பர்திவாலா.
தமிழகத்தில் இன்று முதல் ஏப்.14 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஒரு சில பகுதிகளில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேஸ் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டதை திரும்பப்பெறுமாறு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதவிருக்கிறோம். சர்வதேச சந்தையில் 60 சதவிகிதத்துக்கு மேல் கேஸ் விலை ஏற்றம் செய்யப்பட்டதால், இந்த விலையேற்றம் நிகழ்ந்துள்ளது; அதோடு ஒப்பிடுகையில் இந்த கேஸ் விலையேற்றம் மிக மிக குறைவானதே. இருப்பினும் விலையை குறைக்க வலியுறுத்துவோம் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
டாஸ்மாக் வழக்கில் கோர்ட்டை இழிவுபடுத்தியதாக தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பல்கலை...சட்டத்திருத்த 2-வது மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்திருப்பதால் கவர்னருக்கு பதிலாக மாநில முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார்.
மீண்டும் அனுப்பும் மசோதாக்களின் மீது ஒரு மாதத்தில் ஒப்புதல் தர தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 10 மசோதாக்களும் ஒப்புதல் தரப்பட்டு, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வழக்கறிஞர் வில்சன் கூறியுள்ளார்.
நாங்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசியபோது நேரலை செய்யப்படவில்லை. விஜயபாஸ்கர் பேசியபோது நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. அவையின் மரபின்படி பிரதான எதிர்க்கட்சிக்கு முதல் வாய்ப்பு தர வேண்டும். எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.