இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தென் கடல் பகுதியில் உள்ள அய்யனார் கோயில் கடற்கரை பகுதியில் 28 பொட்டலங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 56 கிலோ கஞ்சா மற்றும் கேட்பாரற்று நின்ற சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து மண்டபம் சுங்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மக்களுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்றும் வகையில் சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியிருப்பது ஏற்கத்தக்கது இல்லை. எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதையும், தேர்தலுக்குப் பின்னர் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் ஏப்.11,12,13 ஆகிய 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் இன்று பாஜகவில் இணைகிறார். கேதர் ஜாதவ் சரத் பவாருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
தமிழக அரசின் 10 மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைத்தது சட்டப்படி தவறானது. பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைத்தது தவறு. கவர்னர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 ஆக குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.65,800க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.8,225க்கு விற்பனையாகிறது.
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் நேற்று (ஏப்.7) 3,000 புள்ளிகள் சரிவடைந்த நிலையில், இன்று (ஏப்.8) 1,100 புள்ளிகள் உயர்ந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டியும் இன்று 350 புள்ளிகளுக்கும் மேல் வர்த்தகம் உயர்ந்தது.
சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையில் அவைக்கு வந்துள்ளனர்.
அமெரிக்கப் பொருள்கள் மீது சீனா விதித்த வரியை திரும்பப் பெறவில்லை என்றால், அந்நாட்டுப் பொருள்கள் மீது ஏப்ரல் 9ம் தேதி முதல் கூடுதலாக 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.வரி விதிப்பு தொடர்பாக சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படுவதாகத் தெரிவித்த அவர், பிற நாடுகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின்போது ரசிகர்களின் செல்போன்களை திருடிய வழக்கில், மேலும் 3 பேரை வேலூர் போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர்கள் இன்று சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளது.