இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி
தமிழகம் எப்போதும் மாநில உரிமைகள் காப்பதில், மாநிலத் தன்னாட்சிக் கொள்கையைப் பேணுவதில் இந்திய ஒன்றியத்திற்கே முன்னோடி மாநிலம் என்பது உலகறிந்த ஒன்று”
- த.வெ.க. பொதுச் செயலாளர் ஆனந்த் அறிக்கை
அன்னை இல்லத்தில் எனக்கு உரிமை இல்லை - ராம்குமார்
நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம்
வீட்டில் தனக்கு எந்த உரிமையும் இல்லை
ராம்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்
பிரமாண பத்திரம் தாக்கல்
அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய
பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி,
நடிகர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய ஞானசேகரனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ஞானசேகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்து நீதிபதி உத்தரவை பிறப்பித்து உள்ளார்.
ராஜஸ்தானின் சிறப்பு கோர்ட்டு ஒன்று, 71 பேரை பலி கொண்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 4 பேரை குற்றவாளிகள் என கடந்த 4-ந்தேதி தீர்ப்பளித்தது. அந்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சென்னையில் உள்ள மாதவரம் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் பரீட்சார்த்த முறையில், அதிநவீன கருவிகள் மற்றும் இயந்திரங்களை ரூ.10 கோடி மதிப்பீட்டில் மாநில அரசின் நிதி உதவியுடன் நிறுவி அதன் செயல்திறன் மேம்படுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
நீட் தேர்வு பற்றிய அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்காது என அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதனால், எந்த தீர்வும் ஏற்பட போவதில்லை. இது ஒரு நாடகம் என அவர் விமர்சித்து உள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் மிட்செல் மார்ஷ் அரைசதம் விளாசியுள்ளார்.
ராஜஸ்தானில் பட்டியலினத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் திகாராம் ஜுல்லி சென்ற ராமர் கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜக தலைவர் க்யான்தேவ் அஹுஜா. இவ்விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியபோதும் தனது செயலை க்யான்தேவ் நியாயப்படுத்தி பேசிய நிலையில், பாஜக அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.