இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-07-2025

Update:2025-07-08 09:15 IST
Live Updates - Page 2
2025-07-08 10:51 GMT

ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சென்னை நகரில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தத் தவறிய சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

2025-07-08 10:43 GMT

செம்மங்குப்பத்தில் ரெயில் சேவை சீரானது

கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் விபத்துக்குள்ளான இடத்தில் ரெயில் சேவை சீரானது. 

2025-07-08 10:39 GMT

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் தகுதியானவர் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிந்துரை செய்துள்ளார். நோபல் பரிசு கமிட்டிக்கு அனுப்பிய பரிந்துரை கடிதத்தின் நகலை டிரம்ப்பிடம் வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார். 

2025-07-08 10:34 GMT

நிகிதா மீது மேலும் ஒரு பண மோசடி புகார்

மடப்புரம் அஜித்குமார் வழக்கில் சிக்கியுள்ள நிகிதாவும், அவரது சகோதரர் கவியரசும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.48 லட்சம் மோசடி செய்ததாக, சென்னை எழும்பூர் உதவி ஆணையர் அலுவலகத்தில் செந்தில்குமார் என்பவர் புகார் அளித்துள்ளார்.

2025-07-08 10:32 GMT

"நாளை (ஜூலை 09) அகில இந்திய அளவில் அறிவிக்கப்பட்டிருக்கும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம் என அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் கமலக்கண்ணன் கூறியுள்ளார்.

2025-07-08 09:52 GMT

தவெகவின் புதிய ஆப் - `My TVK'

தவெக சார்பில் My TVK என்ற புதிய செயலியை விரைவில் அறிமுகம் செய்கிறார் விஜய். உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு கட்சி பணிகளை மேற்கொள்ள உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2025-07-08 09:49 GMT

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம் தேதி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

2025-07-08 09:48 GMT

ராமதாஸுக்கு போட்டியாக அன்புமணி கூட்டம்

சென்னையில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாகக்குழு கூட்டம் தொடங்கியது. பனையூரில் உள்ள அலுவலகத்தில் பாமக நிர்வாகக் குழுவை அன்புமணி ராமதாஸ் கூட்டியுள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் வடிவேல் ராவணன், திலகபாமா, பாலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

2025-07-08 08:25 GMT

ஆமதாபாத் விமான விபத்து - அறிக்கை சமர்ப்பிப்பு


குஜராத் ஆமதாபாத் விமான விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் முதற்கட்ட அறிக்கையை விசாரணைக் குழு சமர்ப்பித்துள்ளது என்றும், விமான விபத்துக்கான காரணம் 4 - 5 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

2025-07-08 08:20 GMT

செம்மங்குப்பம் பகுதியில் ரெயில் சேவை தொடக்கம் 

கடலூர் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7.45 மணிக்கு பள்ளி வேன் மீது ரெயில் மோதியதால் சுமார் 5 மணி நேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது செம்மங்குப்பம் பகுதியல் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்